கோவை: யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடர்பாக அரசு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், யானைகள் சிறப்புநரலவாழ்வு முகாம் தொடர்பாக அரசு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசுகையில், மனிதர்கள் மட்டுமல்லாமல் ஏனைய உயிரினங்களும் நம்முடைய அன்புக்கு உரியவை என்ற அடிப்படையில், திருக்கோவில்களில் உள்ள யானைகளைத் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் ஓய்வு தந்து புத்துணர்ச்சி ஏற்படுத்தவும், சத்தான உணவளித்து, யானைகளை முறையாக பராமரிக்கவும், உடல்நலத்தைப் பேணிக்காகவும், நீர் வளமிக்க சிறப்பான சுற்றுச்சுழல் அமைந்த இயற்கை சூழலில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
2019-2020 ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருக்கோயில் மற்றும் திருமடங்களின் யானைகள் நலவாழ்வு முகாம் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் அருகிலுள்ள பவானி ஆற்றுப்படுகையில் நடைபெறவுள்ளது.
யானைகள் முகாமிற்கு மாண்புமிகு அமைச்சர்கள் வருகை தருவதால் உரிய பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும், வாகனங்கள் நிறுத்தங்களை முறையாக பராமரிக்கவும், வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாம் வளாகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் வனவிலங்குகளால் இடையூறு ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளவும், கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து காட்டுயானைகளின் நடமாட்டத்தை இடைவிடாது கண்காணிக்கவும், வேட்டைத் தடுப்புக் காவலர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தவும், வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாமில் யானைகளின் நலம் பேணுதல் உறுதி செய்யப்படவும், யானைகளின் சிகிச்சைக்கான மருந்துகள் வழங்கவும், ஆந்தராக்ஸ் தடுப்பு மருந்துகள் கொடுக்கவும், தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கவும், அவசர சிகிச்சைக்கான வசதிகள் மேற்கொள்ளவும், 2 கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர்களை நியமிக்கவும், கால்நடைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளவும், 24 மணி அவசர சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலையில் வைத்திருக்கவும், 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஒன்றை தக்க மருத்துவ பணியாளர்களுடன் முகாம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கவும், யானை பாகன்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் ஏதும் தேவையெனில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மருத்துவத்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக மின் இணைப்பு வழங்கவும், தேவையான மின் பணியாளர்களை பணியமர்த்தவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும், லாரிகளில் யானைகள் வரும் வழியில் யானைகள் மீது மின்கம்பிகள் உராயாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முகாமில் உள்ளவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமில் அன்றாடம் சேரும் யானை உணவு திடக்கழிவுகள் மற்றும் இதர திடக்கழிவுகள் அப்புறப்படுத்தச் சுகாதாரப் பணியாளர்களை நியமிக்கவும், நகராட்சி ஆணையர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
யானைப்பாகன்கள் மற்றும் முகாம் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக வழங்கவும், யானைகள் குளிக்க ஏதுவாக சகதி நீக்கப்பட்டு நல்லநீர் வருவதை உறுதி செய்யவும், சாலைகள் பள்ளம் மேடு இன்றி உள்ளதை உறுதி செய்திடவும், முகாமிற்கு தேவையான பால் மற்றும் இதர பால்பொருட்களை உரிய நேரத்தில் தரமானதாக வழங்கிடவும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் போதிய அளவில் தீத்தடுப்பு சாதனங்களுடன், தீயணைப்பு வாகனத்துடன் முகாமில் தயார்நிலையில் இருக்கவேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இம்முகாம் சிறப்பான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இராஜமாணிக்கம், துணை ஆணையர் சபர்மதி, இணை இயக்குநர்(சுகாதாரம்) பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வி.உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்(வடக்கு) சுரேஷ், துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.