கோவை: முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2,332 பயனாளிகளுக்கு ரூ.6.35 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2,332 பயனாளிகளுக்கு ரூ.6.35 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை மாவட்டம், மதுக்கரை, சுகுணாபுரம் 92-வது வார்டு, நரசிம்மபுரம் 91-வது வார்டு ஆகிய இடங்களில் இன்று (23.11.2019) முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாம்களில் அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 2,332 பயனாளிகளுக்கு ரூ.6.35 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மதுக்கரையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.42.26 லட்சம் மதிப்பீட்டில் உதவி செயற்பொறியாளர் குறிச்சி மற்றும் உதவி மின்பொறியாளர், தெற்கு, குறிச்சி, ஹவுசிங்யுனிட் புதிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த முகாமில், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் 1222 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1.45 கோடி மதிப்பிலும், வருவாய்த்துறையின் மூலம் முதலமைச்சரின் விபத்து நிவாரணத்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு உதவித்தொகை ரூ 1.92 லட்சம் மதிப்பிலும், மகளிர் திட்டத்தின் மூலம் 122 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் ரூ.30.50 இலட்சம் மதிப்பிலும் மற்றும் 49 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி ரூ.84.80 இலட்சம் மதிப்பிலும், 25 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் ரூ.92 ஆயிரம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ரூ.32 ஆயிரம் மதிப்பிலும் வழங்கப்பட்டது.
மேலும், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 49 பயனாளிகளுக்கு கடனுதவி ரூ.63.65 லட்சம் மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் மூலம் 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ரூ.9.42 லட்சம் மதிப்பிலும், வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் 394 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் ரூ.1.84 கோடி மதிப்பிலும், 31 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா ரூ.93 லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் ரூ.4.81இலட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் குடும்ப அட்டைகள் 60 பயனாளிகளுக்கும், 288 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் ரூ.12.96 லட்சம் மதிப்பிலும், கோயம்புத்தூர் மாநகராட்சி மூலம் சொத்துவரி புத்தகம் 17 பயனாளிக்கும், புதிய குடிநீர் இணைப்பு பணி உத்தரவு 12 பயனாளிகளுக்கும், என மொத்தம் 2,332 பயனாளிகளுக்கு ரூ.6.35 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாம்களில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, வி.பி.கந்தசாமி, மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ஷ்ரவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா இராமசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.