மண்டி விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் - விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர்

கோவை: மண்டி விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி வெளியேறிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கோவை: மண்டி விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி வெளியேறிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.



கோவை வெரைட்டி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வணிகத்துறை தற்போது கடும் நஷ்டத்தில் உள்ளதாகவும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை கண்டித்து வரும் டிசம்பர் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஜி எஸ் டியில் வணிகர் சங்கத்தின் கோரிக்கை இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் உள்நாட்டு வணிகர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

பின்னர் மண்டி விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளது தொடர்பாக கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதி மீது வணிகர்களுக்கு நல்ல மரியாதை உள்ளது என்றும் மண்டி விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி வெளியேறிட வேண்டும் என்று கூறிய அவர், எந்த நடிகராக இருந்தாலும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விளம்பரத்தைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...