கோவை: மேட்டுப்பாளையம் அருகே மழை நீர் தடுப்பணையில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட கிழக்கு பருவமழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் புது காய்கறி மண்டி அருகே உள்ள தடுப்பணையில், தற்போது தண்ணீர் முழுவதும் நிரம்பி குட்டை போல காட்சி அளிக்கிறது. இதில் மீன்கள் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அந்த குட்டையில் குளிப்பதற்காகவும் மீன் பிடிப்பதற்காகவும் இறங்கிய 15 வயது சிறுவன் தண்ணீரில் இருந்த சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். அடையாளம் தெரியாத அச்சிறுவன் தண்ணீரில் மூழ்குவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த அச்சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவன் யார் எந்த பகுதியினை சேர்ந்தவன் என எந்த விபரமும் இதுவரை தெரியாத நிலையில் சிறுவனின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறுமுகை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.