கோவை: மஹாராஷ்ராவில் ஆட்சி அமைப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளது எனவும் எதிர்கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் கால அவகாசம் கொடுக்காதது, இத்தனை ஆண்டுகள் கட்டி காப்பற்றப்பட்டு வந்த அரசியல் நெறிமுறைகளை ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
கோவை: மஹாராஷ்ராவில் ஆட்சி அமைப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளது எனவும் எதிர்கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் கால அவகாசம் கொடுக்காதது, இத்தனை ஆண்டுகள் கட்டி காப்பற்றப்பட்டு வந்த அரசியல் நெறிமுறைகளை ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் தமிழக பொறுப்பாளுமான சஞ்சய் தத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருவதாகவும் பணமதிப்பிழப்பு நீக்கம், ஜி.எஸ்டி போன்றவற்றை ஆதரித்த தமிழக அரசு மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக வீழ்ந்து உள்ளது என்றார்.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு ஒன்பது சதவீதமாக குறைந்து உள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசின் தவறான கொள்கை காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு வருபவர்களை காப்பாற்ற முடியவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறிய பா.ஜ.க அரசு, கருப்பு பணத்தை கொண்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி செலவழித்து ஆட்சி அமைத்துள்ளது என்றும் தேர்தல் செலவுகளுக்குக் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்கள் பணம் நன்கொடையாக கொடுத்து உள்ளதாக தற்போது தெரியவந்து கொண்டு இருப்பதாக கூறினார்.
மஹாராஷ்ராவில் ஆட்சி அமைப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளது எனவும் எதிர்கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் கால அவகாசம் கொடுக்காதது, இத்தனை ஆண்டுகள் கட்டி காப்பற்றப்பட்டு வந்த அரசியல் நெறிமுறைகளை ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆட்சி அமைக்க பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பசியை காண்பிப்பதாக தெரிவித்தார். சோனியா,ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை திரும்ப பெற்றது, அரசியல் காழ்ப்புணர்ச்சி எனவும் அவர்களுக்கு மீண்டும் எஸ்.பி.ஜி பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல மத்தியில் ஆளும் பா.ஜ.க மக்கள் விரோத கொள்கையை மாற்றி கொள்ளாவிட்டால் இன்று நடைபெறுவதோடு நிற்காமல் மக்களுக்காக தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியவர், மஹாரஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய இருப்பது வரவேற்பதாக டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், கஜா புயலால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற கூட வராத பிரதமர் போதுமான நிதியை ஒதுக்காததுடன் இது குறித்து ஒரு பதிவை கூட ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பாளர் மோகன் குமாரமங்களம், புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன், சக்திவேல், வீனஸ் மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.