மாவோயிஸ்ட் தீபக் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமானம் மூலம் சட்டீஸ்கர் அழைத்துச் செல்லப்பட்டார்
கோவை: கோவையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமானம் மூலம் சட்டீஸ்கர் மாநிலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினரால் மாங்கரை வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீபக் கைது செய்யப்பட்டார்.
இப்படியிருக்க தீபக்கின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சிகிச்சை முடிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது சட்டீஸ்கர் மாநிலத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாால், சட்டீஸ்கர் மாநில
போலீசார் தீபக்கை அழைத்து செல்ல கோவை வந்தனர்.
இப்படியிருக்க சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட நீதிமன்றம் மாவோயிஸ்ட் தீபக்கை கோவை மத்திய சிறையில் இருந்து சுக்மா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பி.டி வாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்று
சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட டிஎஸ்பி மனோஜ் தர்வா தலைமையிலான போலீசார் கோவை மத்திய சிறையில் இருக்கும் தீபக்கை கோவை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது.
பின்னர் பரிசோதனை முடிந்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், சாலை வழியாக சட்டீஸ்கர் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீபக் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.