கோவை: கோவையில் சிறப்பு இலக்கு படையினரால் கைது செய்யப்பட்ட தீபக்கை சட்டீஷ்கர் போலீசார் அவர்களது மாநிலத்திற்கு அழைத்துச் சென்று போலி என்கவுண்டர் செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வழக்கறிஞர் ப.பா. மோகன் கோவை மத்திய சிறை முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் சிறப்பு இலக்கு படையினரால் கைது செய்யப்பட்ட தீபக்கை சட்டீஷ்கர் போலீசார் அவர்களது மாநிலத்திற்கு அழைத்துச் சென்று போலி என்கவுண்டர் செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வழக்கறிஞர் ப.பா. மோகன் கோவை மத்திய சிறை முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மாங்கரை அருகே கடந்த 9 ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தீபக்கினை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குழுவினர் நேரில் சந்தித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது:
தீபக் மீது காவல் துறை பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். தீபக்கினை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கோவை நீதிமன்றம் எழுத்து பூர்வமாக அனுமதி அளித்தும், சிறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை.
தற்போது உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் வழக்கறிஞர்கள் கோவை மத்திய சிறையில் தீபக்கினை சந்தித்து பேசினோம்.
தீபக் ஆயுத பயிற்சி அளித்ததாக காவல் துறை சொல்வது அப்படமான பொய். அதேபோல அவரை பிடித்து சிறப்பு இலக்கு படையினர் கல்லால் அடித்து கை, கால்களை உடைத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் போலி என்கவுண்டரில் தீபக்கினை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.
தீபக் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறுவது பொய் எனவும், கடந்த 2010 ம் ஆண்டில் சதீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் 76 சி.ஆர்.பி.எப் படையினர் கொலை செய்யப்பட்ட வழக்கிற்கும் தீபக்கிற்கும் தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது வழக்கறிஞர் சத்தியபாலன், ராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.