கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள புனித மேரி உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் சிறுமிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளி சிறுமிகளிடம் தொடரும் பாலியல் சீண்டல்களை தடுக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்தி மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் ஐந்தாவது வீதியில் உள்ள புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பள்ளியின் தாளாளர் மரிய ஆண்டனி ராஜ் என்பவர் ஆபாச வீடியோ காட்டியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் தாளாளர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியது உறுதிப்படுத்தப்பட்டது.
இப்படியிருக்க பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய விவகாரத்தில் தாளாளர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும், கோவையில் தொடர்ச்சியாக பள்ளி வளாகங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல மாவட்ட நிர்வாகம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிகழ்வில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.