நீலகிரி: நீலகிரி வியாபாரிகள் சங்கம் சார்பில் உதகையில் பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேசிய வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வியாபாரம் முழுவதுமாக குறைந்து விட்டதாகவும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் தரமில்லாத உணவுப்பொருட்கள் குறிப்பாக மளிகை பொருள் மருந்து வகைகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்து வருவதாகவும், இதை தடுக்க மத்திய அரசு போட்ட சட்டங்கள் மூன்றே நாளில் மீறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நீலகிரி: நீலகிரி வியாபாரிகள் சங்கம் சார்பில் உதகையில் பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேசிய வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா,
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வியாபாரம் முழுவதுமாக குறைந்து விட்டதாகவும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் தரமில்லாத உணவுப்பொருட்கள் குறிப்பாக மளிகை பொருள் மருந்து வகைகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்து வருவதாகவும், இதை தடுக்க மத்திய அரசு போட்ட சட்டங்கள் மூன்றே நாளில் மீறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு வணிகர்கள் தங்களது வியாபாரத்தை பெருக்குவதற்கு உள்நாட்டு அதிகாரிகளை எவ்வாறு சரிக்கட்டுவது என்பதை அறிந்து வைத்துக் கொண்டிருப்பதனால் அவர்கள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.
மத்திய மாநில அரசின் தவறான சில கொள்கைகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவதற்கான தேதியை நாளை சனிக்கிழமை நடைபெறும் வணிகர் சங்கங்களின் கூட்டத்தில் பேசி முடிவெடுக்க உள்ளதாக, அவர் தெரிவித்தார்.