மேட்டுப்பாளையம் அரசுப்பள்ளி, மருத்துவமனை, நீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கோவை ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருத்துவனை, மேட்டுப்பாளையம் நகர பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் சாமன்ன வாட்டர் ஹவுஸ் போன்ற பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருத்துவனை, மேட்டுப்பாளையம் நகர பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் சாமன்ன வாட்டர் ஹவுஸ் போன்ற பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  

மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய கழிவறை மற்றும் குடிநீர்  வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என ஆட்சியரிடம் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அப்பள்ளிக்கு நேரில் வந்த கோவை ஆட்சியர் அங்குள்ள நிலவரம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரனை நடத்தினார். 



மேலும், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போதிய கட்டிட வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் உடனடியாக இதற்கு தீர்வு காண ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கழிப்பறை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தர  நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

அடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு திடீரென சென்ற ஆட்சியர் அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு,.டெங்கு காய்ச்சல்

பிரிவு போன்றவற்றை ஆய்வு செய்ததுடன் மருந்துகள் இருப்பு மற் நோயாளிகளின் வசதிகள்  குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

பின்னர், மேட்டுப்பாளையம் நகருக்கு பொதுமக்களுக்கு குடிநீர் எடுக்கும் சாமன்ன வாட்டர் ஹவுஸ் பகுதிக்கு நேரில் சென்று அங்கு தண்ணீரின் சுத்தகரிப்பு  மற்றும்  தரம் குறித்து பாட்டில்களில் குடிநீரை பிடித்து  

கள ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், நகர பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் காரணமாக முக்கிய சாலைகளில்  தோண்டபட்டுள்ள குழிகள் மூடப்படாமல் உள்ளதால்  சாலைகளில் விபத்துகள் அதிகரித்துள்ளது குறித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் ஏராளமானோர் குறை கூறினார்கள். அது குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ராசாமணி பொதுமக்களிடம் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளர் உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...