"நீண்ட நாள் கனவு நிறைவேறியது..!'" சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் பயணம் செய்த ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சி

ஆதரவற்ற குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 குழந்தைகள் மற்றும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி திருநங்கை சிறுமி ஆகியோரை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

கோவை: ஆதரவற்ற குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 குழந்தைகள் மற்றும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி திருநங்கை சிறுமி ஆகியோரை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

குழந்தைகளுக்கு பயணங்கள் என்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அதுவும் ஏழைக் குழந்தைகளுக்கு விமானத்தில் பயணம் என்பதெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதுபோன்ற ஒரு கனவு சென்னையில் உள்ள ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு நனவாகியிருக்கிறது. 



'வானமே எல்லை' என்ற பெயரில் சென்னையில் இருந்து கோவை வரை ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த 25 பள்ளிக் குழந்தைகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு, வி.ஜி.பி தமிழ்சங்கம் மற்றும் கோவையை சேர்ந்த பார்க் கல்வி குழுமத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 

சென்னை விமான நிலையத்தில் காலை உணவை முடித்த குழந்தைகள் விமானத்தில் முதன்முறையாக ஏறி மகிழ்ச்சி அடைந்தனர். வான் வெளியில் உயரத்தில் பறந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இன்னொரு முறை விமானத்தில் பறக்க வேண்டும் என தோன்றியதாகவும் குழந்தைகள் தெரிவித்தனர். 



அவர்களுடன் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரெஹானா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பயணம் செய்தனர். கோவை விமானநிலையம் வந்திறங்கிய குழந்தைகளை தன்னார்வ அமைப்பினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

பின்னர், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோவையில் ஜி டி கார் மியூசியம், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். தொடர்ந்து கோவையில் இரவு உணவை முடித்துவிட்டு ரயில் மூலமாக சென்னை திரும்புகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...