மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

கோவை: கோவையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடி விரைவு படையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட்டுகள் சுற்றி வருவதாக உளவுத்துறை மூலம் சிறப்பு அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை எஸ்பி மூர்த்தி தலைமையில் மூன்று குழுவாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் வேட்டையில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு சிறப்பு அதிரடி விரைவு படையினர் கோவை மாவட்டத்தில் உள்ள சேம்புகரைக்கு அருகே உள்ள மூலக்கண்கள் பகுதியில் மாவோயிஸ்ட் தீபக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மேலும், தீபக்கை போலீசார் கைது செய்யும் பொழுது காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். இந்த நிலையில், மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மணி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஒப்புதலின்படி வழக்கு பதிவு செய்து மாவோயிஸ்ட் தீபக் கோவை மத்திய சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....