திருப்பூரில் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு

திருப்பூர்: திருப்பூரில் கொங்கணகிரி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்களுடன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் கொங்கணகிரி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்களுடன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால், பொதுமக்களுக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கும் இடையூறாக இருப்பதால் அக்கடையை அகற்ற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

பகல் 12 மணியில் இருந்து இரவு வரையில் ஏராளமானவர்கள் வந்து மது குடித்துவிட்டுச் செல்லும் போது மாணவிகளை கிண்டல், கேலிகள் செய்வது அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.



இந்நிலையில், மாணவ, மாணவியருக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனுடன் வந்து புகார் மனு அளித்த பொதுமக்கள், இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...