கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு, தெற்கு மண்டலங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண்.64 வரதாராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும், தெற்கு மண்டலம் வார்டு எண்.86 கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அனுமதி உத்தரவுகள், கிழக்கு மண்டலத்தில் 20 பருக்கும், தெற்கு மண்டலத்தில் 11 பேருக்கும், சொத்துவரி பெயர் மாற்ற உத்தரவுகள் கிழக்கு மண்டலத்தில் 37 பேருக்கும், புதிய குடிநீர் இணைப்பு வேலை உத்தரவுகள் கிழக்கு மண்டலத்தில் 38 பேருக்கும் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
பின்னர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட கரும்புக்கடை வார்டு எண்.86-ல் பாதாளச் சாக்கடை பணியாளர்கள் 12 பேருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கும், மக்காத குப்பைகளை சேகரிப்பதற்கான கழிவுகள் அகற்றும் ரூ.60 லட்சம் மதிப்பிலான 10 TATA ACE வாகனங்களின் இயக்கத்தினை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குறிச்சி குளம் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.52.16 கோடி மதிப்பிலான செயல்திட்ட வரைபட மாதிரியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் அவர்கள், மண்டல உதவி ஆணையர்கள் டி.ஆர்.ரவி அவர்கள், ம.செல்வன் அவர்கள், நிர்வாக பொறியாளர் பார்வதி அவர்கள், மேற்கு மண்டல செயற்பொறியாளர்.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்.ஞானவேல் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.