கோவை: கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ஒவ்வொரு நோயாளியையும் நோயாளியின் உறவினர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ஒவ்வொரு நோயாளியையும் நோயாளியின் உறவினர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தினமும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்லும் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் வசதி கழிப்பறை வசதி, நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருப்பிடங்கள், அதேபோல சிகிச்சையில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நேரடியாக ஒவ்வொரு நோயாளியையும் நோயாளியின் உறவினர்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த தீடீர் ஆய்வின் காரணமாக அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.