கோவை: கோவையில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய தாளாளர்; பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.

கோவை: கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் ஐந்தாவது வீதி பகுதியில் உள்ளது புனித மேரி பள்ளி. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பள்ளி தாளாளர் மரிய அண்டனி என்பவர் ஆபாச வீடியோ காட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் பெண் ஆய்வாளர்கள் ஆகியோருடன் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தாளாளர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.