முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்; ரூ.8.91 கோடி மதிப்பில் 2,366 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர்‌ பகுதியில் நடைபெற்ற முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாமில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி 2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர்‌ பகுதியில் நடைபெற்ற முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாமில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி 2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

கோவை மாவட்டம்‌, சிங்காநல்லூர்‌ வரதராஜபுரம்‌ மற்றும்‌ கரும்புகடை ஆகிய இடங்களில்‌ இன்று (நவ., 21) முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இம்முகாம்களில்‌ அமைச்சர்‌ அவர்கள்‌ பொதுமக்களிடம்‌ இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு 2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌. அதில், சமூக பாதுகாப்புத்திட்டத்தின்‌ மூலம்‌ 1751 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2.09 கோடி மதிப்பிலும்‌, வருவாய்த்துறையின்‌ மூலம்‌ முதலமைச்சரின்‌ விபத்து நிவாரணத்தொகை 39 பயனாளிகளுக்கு ரூ.35.5 லட்சம்‌ மதிப்பிலும்‌, மகளிர்‌ திட்டத்தின்‌ மூலம்‌ 125 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம்‌ ரூ.31.25 லட்சம்‌ மதிப்பிலும்‌ மற்றும்‌ 80 மகளிர்‌ சுய உதவிக்குழுக்களுக்குக் கடனுதவி ரூ.1.01 கோடி மதிப்பிலும்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ 57 பயனாளிகளுக்கு இலவச தையல்‌ இயந்திரம்‌ கண்கண்ணாடி, மகப்பேறு உதவித்தொகை, ரூ.2.25 லட்சம்‌ மதிப்பிலும்‌, 41 பயனாளிகளுக்கு முஸ்லிம்‌ மகளிர்‌ உதவும்‌ சங்கம்‌ மூலம்‌ நிதியுதவி ரூ.2.05 லட்சம்‌ மதிப்பிலும்‌, சமூக நல அலுவலகத்தின்‌ மூலம்‌ 80 பயனாளிகளுக்கு இலவச தையல்‌ இயந்திரங்கள்‌ ரூ.4 லட்சம்‌ மதிப்பிலும்‌ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டக்கலைத்துறையின்‌ மூலம்‌ 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்‌ ரூ.40 ஆயிரம்‌ மதிப்பிலும்‌, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின்‌ மூலம்‌ 7 பயனாளிகளுக்குக் கடனுதவி ரூ.26 லட்சம்‌ மதிப்பிலும்‌, மாவட்ட தொழிலாளர்‌ நல வாரியம்‌ மூலம்‌ 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்‌ பெறுவதற்கான காசோலைகள்‌ ரூ.1.20இலட்சம்‌ மதிப்பிலும்‌, மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ மூலம்‌ 2 பயனாளிகளுக்கு விசைத்தறி மூலம்‌ காடா துணி நெய்தல்‌, உலர்ந்த தேங்காய்‌ உற்பத்தி செய்ய கடனுதவி ரூ.2.82கோடி மதிப்பிலும்‌, கோவை மாநகராட்சி மூலம்‌ சொத்துவரி பெயர்‌ மாற்ற உத்தரவு, புதிய குடிநீர்‌ இணைப்பு பணி உத்தரவு 86 பயனாளிகளுக்கும்‌, 12 துப்புரவு பணியாளர்களுக்கு பாதாள சாக்கடை உபகரணங்கள்‌ ரூ.50 ஆயிரம்‌ மதிப்பிலும்‌, தெற்கு மண்டலத்திற்கு 10 சுகாதார வாகனங்கள்‌ ரூ.60 லட்சம்‌ மதிப்பிலும்‌, மாவட்ட வழங்கல்‌ துறையின்‌ மூலம்‌ புதிய குடும்ப அட்டைகள்‌ 50 பயனாளிகளுக்கு, குடிசை மாற்று வாரியத்தின்‌ மூலம்‌ 14 பயனாளிகளுக்கு வீடு வழங்குவதற்கான ஆணை ரூ1.36 கோடி மதிப்பிலும்‌ என மொத்தம்‌ 2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்பட்டுள்ளது.



இம்முகாம்களில்‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, பி.ஆர்‌.ஜி. அருண்குமார்‌, ஒ.கே.சின்னராஜ்‌, வி.சி.ஆறுக்குட்டி, அம்மன்‌ கே.அர்ச்சுனன்‌, வி.பி.கந்தசாமி, மாநகராட்சி ஆணையாளர்‌ ஜெ.ஷ்ரவன்குமார்‌., மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராம துரைமுருகன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ பிரசண்னாஇராமசாமி, வருவாய்‌ கோட்டாட்சியர்‌(தெற்கு) தனலிங்கம்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌(மகளிர்‌ திட்டம்‌) செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ மணிமொழி, வட்டாட்சியர்‌(தெற்கு) தேவேந்திரன்‌ உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...