மேட்டுப்பாளையத்தில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி: காண குவியும் மக்கள்..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜியன். இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஆட்டு பட்டியினை அமைத்து அதில் 100க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.



இந்த நிலையில் இவரது ஆட்டுப் பட்டியில் உள்ள ஒரு செம்மறி ஆடு கருவுற்று இருந்த நிலையில் நேற்று இரவு ஆறு கால்களுடன் கூடிய அதிசய ஆட்டு குட்டியினை ஈன்றது. இதனையடுத்து ஆறு கால்களுடன் கூடிய ஆட்டுக்குட்டி பிறந்துள்ள அதிசயத்தை அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

பொதுவாக மனிதர்களுக்கு உள்ளது போலவே கால்நடைகளுக்கும் ஹார்மோன் குறைபாடு காரணமாக இதுபோன்று கூடுதல் கால்கள் மற்றும் தலைகள் உருவாக காரணம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த கால்கள் ஆடுகளுடன் சேர்ந்து வளர வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...