அரசு நலத்திட்ட விழாவில் புறக்கணிப்பு; போலீசாருடன் திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கோவை: அரசு நலத்திட்ட விழாவில் வேண்டுமென்றே தன்னை புறக்கணித்து உள்ளதாக கூறி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: அரசு நலத்திட்ட விழாவில் வேண்டுமென்றே தன்னை புறக்கணித்து உள்ளதாக கூறி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அரசு சார்பில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஊரக வளர்ச்சி,நகராட்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்க இருந்தார்.

அப்போது, அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் அரசு சார்பில் நடக்கும் விழாவில் தனக்கு அழைப்பில்லாத போதும் கலந்து கொள்ள வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், விழாவில் கலந்துகொள்ள தங்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனது தொகுதிக்குள் நடக்கும் அரசு நலத்திட்ட விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டுள்ளார் என்பதற்காக அரசு அதிகாரிகள்,தனக்கு அழைப்பு விடுக்காமல், நடத்துவது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், அதிமுகவின் சொந்த விழா என்றால் ஏன் அரசு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என காவல் துறையினருடன், திமுக எம் எல் ஏ கார்த்திக் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர் தனது கட்சி உறுப்பினர்களுடன் விழா நடைபெறும் இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...