நீலகிரி: மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகை இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை நடத்திய இந்த மதுவிலக்கு பேரணியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த பேரணியை துவக்கி வைத்த பின் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ரயில் நிலையத்திலிருந்து தாவரவியல் பூங்கா செல்லும் பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனர். பேரணியானது ரயில்நிலையத்தில் துவங்கி பிரதான சாலையில் வழியே பழங்குடியினர் பண்பாட்டு மையத்தை அடைந்தது.