நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், அரசு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா மற்றும் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் 2615 பயனாளிகளுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பாலம் கட்டவும், தடுப்பு சுவர் உள்ளிட்டவை அமைக்க ரூ.10 கோடியே 35 லட்சம் நிதி வழங்க முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க உதவிய மத்திய அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்காக ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.