ஓலா நிறுவனத்தின் முன் தீக்குளிக்கப்போவதாக வீடியோ வெளியான சம்பவம்; தீக்குளிக்க வந்த நபரை கைது செய்த போலீசாரால் பரபரப்பு

கோவை: முறையான கமிஷன் மற்றும் போனஸ் தராமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஓலா நிறுவனத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக ஓட்டுநர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதையடுத்து தீக்குளிக்க வந்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: முறையான கமிஷன் மற்றும் போனஸ் தராமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஓலா நிறுவனத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக ஓட்டுநர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதையடுத்து தீக்குளிக்க வந்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓலா கேப்ஸ் என்பது போக்குவரத்து வலை நிறுவனமாகும். இந்நிறுவனம் முதன்முதலில் தொலைத் தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையை வழங்கியது. இது படிப்படியாக உயர்ந்து இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் வாடகை கார் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போட்டு, கமிஷன் அடிப்படையில் பணம் கொடுத்து வருகின்றனர்.

இதில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கார்கள் ஓலா நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். ஓலா நிறுவனம் கமிஷன் மற்றும் போனஸ் தொகையை ஆண்டுதோறும் முறையாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஒழுங்காக கமிஷன் மற்றும் போனஸ் தொகையை வழங்காமல் ஓலா ஒட்டுநர்களை ஏமாற்றி வருவதாக பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பணியாளர்கள் கொடுத்துள்ளனர்.



இதனையடுத்து, அதிகாரிகளும் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுபவருக்கு உரிய தொகை வழங்க அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் உத்தரவிட்டும் ஓலா நிறுவனம் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகையை முறையாக வழங்கவில்லை.

இந்த நிலையில், ஓலா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர் இன்று ஓலா நிறுவனத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனையடுத்து, ஆர் எஸ் புரம் ஓலா நிறுவனம் அலுவலகம் அருகே தயார் நிலையில் இருந்த போலீசார் தீக்குளிக்க வருவதாக வீடியோ எடுத்து வெளியிட்ட நபரை பிடித்தனர்.

அப்போது, இன்றைக்கு தன்னை போலீசார் காப்பாற்றி விட்டதாகவும், நாளைக்கு நிறைய ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்ய முயலும் போது ஒன்றும் செய்ய முடியாது. ஓலா நிறுவனத்திடம் இருந்து உரிய கமிஷன் மற்றும் போனஸை வாங்கி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரால் பிடிபட்ட பிரசாத் கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....