சொத்துவரியை மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு தொழில் அமைப்பினர் வரவேற்பு

கோவை: தமிழகத்தில் மாநகாட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழும் மக்கள் பழைய சொத்துவரியை செலுத்தினால் போதும் என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது


கோவை: தமிழகத்தில் மாநகாட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழும் மக்கள் பழைய சொத்துவரியை செலுத்தினால் போதும் என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்‌ தமிழகத்தில்‌ தொழில்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கான சொத்துவரி உயர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி தொழில்‌ வணிக நிறுவனங்களுக்கு 100% வரி உயர்வும்‌, வீடுகளுக்கு 50% வரி உயர்வும்‌ விதிக்கப்பட்டு, அது 01.04.2012ம்‌ தேதி என்ற முன்‌ தேதியிலிருந்து கட்டப்பட வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டது. இதனால்‌ மக்களும்‌, தொழில்‌, வணிக நிறுவனங்களை நடத்துவோரும்‌ கடுமையாக பாதிக்கப்படுவார்கள்‌ என்ற நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட சிறுதொழில்கள்‌ சங்கமான கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, சீமா தலைவர் கிருஷ்ணகுமார், சைமா இணைச் செயலாளர் கணேஷ் மற்றும் கோவையின்‌ பல தொழில்‌ வணிக அமைப்புகளுடன்‌ இணைந்து நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ ஊரக வளர்ச்சி, சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, அவர்களை சந்தித்து வரி உயர்வை குறைக்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும்‌ தமிழக அரசின்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வேண்டுகோள்‌ மூலம்‌ வரி உயர்வை குறைக்கும்படி மனு அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழைய வரிப்படி செலுத்தினால் போதும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில், சொத்துவரியை மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதற்கும் ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி, செலுத்தியவர்களின்‌ சொத்து வரி கணக்கில்‌ அடுத்த அரையாண்டுகளில்‌ ஈடு செய்யப்படும்‌ என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்‌ மற்றும்‌ பொருளாதார சூழல்‌ மந்தமாக உன்ள நிலையில்‌ தங்களின்‌ கோரிக்கையை ஏற்று “சொத்து வரி உயர்வை" நிறுத்தி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி அவர்களுக்கு கொடிசியாவின்‌ சார்பில்‌ நன்றி தெரிவிப்பதாக கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...