கோவை - மைசூர் இடையே ரூ.1500 கோடி செலவில் பைபாஸ் சாலை திட்டம் - சபாநாயகர் தனபால்

கோவை: கோவையில் இருந்து மைசூர் வரை 1500 கோடி ரூபாய் செலவில் மாநில அரசே பைபாஸ் சாலை திட்டம் செயல்படுத்த உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து மைசூர் வரை 1500 கோடி ரூபாய் செலவில் மாநில அரசே பைபாஸ் சாலை திட்டம் செயல்படுத்த உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூரில் முதலமைச்சரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டாட்சியர் அலுவல வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவினாசி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான தனபால் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அப்போது, தமிழக அரசு சார்பில் இலவச ஆடுகள், விவசாய வங்கி கடன், முதியோர் உதவித்தொகை, அம்மா இருசக்கர வாகனம், இலவச பட்டா என சுமார் 1500 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால் வழங்கினார்.

இதனையடுத்து விழாவில் பேசிய சபாநாயகர் தனபால், கோவை சத்தியமங்கலம் சாலை அன்னூர் வழியே செல்லும் போது, சரவணம்பட்டி முதல் சத்தியமங்கலம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஏற்படுவதால் வாகனங்கள் இதில் சிக்கி பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்க கோவை சரவணம்பட்டி முதல் மைசூர் வரை சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பைபாஸ் சாலை திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.



மேலும், முழுக்க முழுக்க தமிழக அரசின் மூலம் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கி உதவியுடன் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்த அவர், அன்னூர் மற்றும் அவினாசி பகுதிகளில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்பாள் பழனிச்சாமி மற்றும் ஒன்றிய துணை செயலாளர் சாய் செந்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....