வால்பாறையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; போலீசார் விசாரணை

கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அய்யர்பாடி தேயிலை தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மாதந்தோறும் 10ம் தேதிக்கு மேல் வால்பாறைக்கு சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று மிகுந்த சிரமத்திற்கிடையில் சம்பளம் பெற்று வந்தனர்.

இதனையடுத்து இவர்களது சிரமத்தை போக்க கடந்த 9ம் தேதி அய்யர்பாடி தபால் நிலையம் அருகில் ஆக்சிஸ் வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தின் கீழ்பகுதி உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



தகவலறிந்து வந்த வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன், ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உளவு பிரிவு காவலர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிந்துள்ள கைரேகைகளைச் சேகரித்து வருகின்றனர்,

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...