மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

கோவை: கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி தடாகம் போலிசார் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மாவோயிஸ்ட் தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மாவோயிஸ்ட் தீபக்கை நேரில் சந்தித்து பேசிய பின்னர் தான் பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார். இதனையடுத்து மனு மீதான விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதி சக்திவேல் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மற்றும் விஜயராகவன், சத்தியபாலன் ஆகியோர் அடங்கிய குழுவினரை மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதி அளித்தார்.

நீதிபதி அளித்த உத்திரவு ஆணையுடன் அரசு மருத்துவமனைக்கு வழக்கறிஞர் குழுவினர் சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகமும், சிறை துறை அதிகாரிகளும் மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதி மறுத்தனர். 

இதனையடுத்து பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த வழகறிஞர். மோகன் நீதிபதி சக்திவேலிடம் இதுகுறித்து முறையிட்டார்.

மேலும், அரசு தரப்பில் மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவை காவல் துறையினர் திரும்ப பெறுவதாக நீதிபதியிடம் முறையிட்டனர்.

இந்நிலையில், தடாகம் போலீசார் போலீஸ் காவலுக்கு கொடுக்கப்பட்டிருந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி சக்திவேல் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனைத்தொடர்ந்து மாவோயிஸ்ட் தரப்பு வழகறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது:-

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞரை சந்திப்பது என்பது அடிப்படை உரிமை. மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் மருத்துவமனை நிர்வாகமும், சிறைதுறையும் அனுமதி மறுத்துள்ளது.

தீபக்கை கோவை காவல் துறை திட்டமிட்டு பிடித்து தாக்கி அவரை காயப்படுத்தி இருக்கின்றது. தீபக்கின் உயிருக்கு காவல் துறையால் ஆபத்து உள்ளது. இந்த தகவல் குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்து இருக்கின்றோம்.

நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் சந்திக்க விடாமல் இருந்த அரசு மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவ அலுவலர், சிறைதுறை அதிகாரி உட்பட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபக் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...