கோவை: சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க நீதிமன்ற உத்தரவு இருந்தும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை வழக்கறிஞர்கள் இன்று நேரில் சந்திக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வழக்கறிஞர் குழுவினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். ஆனால் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி செல்வன் அனுமதி மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர், நீதிமன்ற அனுமதி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர். பின்னர், சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர்கள் சந்திக்க காவல்துறையிடம் நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்துள்ளனர். ஆனால் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர் குழுவினர் மீண்டும் நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதிக்காத சிறைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோவை அரசு மருத்துவமனையின் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித உரிமை வழக்கறிஞர் ப.பா மோகன் தெரிவித்தார்.