உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கழிப்பறைகளின் தரம் குறித்த சோதனை தொடக்கம்

கோவை: உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து மாநகராட்சியின் கீழ் வரும் 369 கழிப்பறைகளின் தரம் குறித்த சோதனை தொடங்கியுள்ளது.

கோவை: உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து மாநகராட்சியின் கீழ் வரும் 369 கழிப்பறைகளின் தரம் குறித்த சோதனை தொடங்கியுள்ளது.

இந்த துறையில் பணிபுரியும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான 'தூய்மை கழிப்பறை' அமைப்பால் இந்த தர சோதனை நடத்தப்படுகிறது. கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார் www.cleantoilet.org என்ற வலைத்தளம் இதனை தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பேசுகையில், “கோவை மாநகராட்சியின் கீழ் வரும் 369 கழிப்பறைகள் அனைத்தையும் தர சோதனை செய்ய ரோட்டரி கிளப்புடன் இணைந்து கோவை மாநகராட்சி இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளதாக கூறினார்.

கோவையில் பொது கழிப்பறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், கழிப்பறைகளின் தற்போதைய நிலை குறித்து அறிய மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு, குடிமை அமைப்பின் மூலம் கழிப்பறைகள் சுகாதாரமாக வைக்க முடியும் என்றார்.

அனைத்து கழிப்பறைகளிலும் சானிட்டரி நாப்கின்கள், எரியூட்டிகள் போன்றவற்றிற்கான விற்பனை இயந்திரங்கள் உள்ளிட்ட சிறந்த வசதிகள் இருப்பதில்லை என்று கூறிய அவர், அனைத்து கழிப்பறைகளும் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே கோவை மாநராட்சியின் நோக்கம் என்றும் தூய்மை இந்தியா அமைப்பானது பள்ளி குழந்தைகளுக்கு துப்புரவு மற்றும் தூய்மையான கழிப்பறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....