நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் கழிவுகளாலும்,இயற்கைக்கு எதிரான செயல்களாலும் தனது இளமையை இழந்து வருகிறது நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் கழிவுகளாலும்,இயற்கைக்கு எதிரான செயல்களாலும் தனது இளமையை இழந்து வருகிறது நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ரிவர் சைடு தனியார் பள்ளி மற்றும் உதகையில் காந்தள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரம் நடவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதைத்தொடர்ந்து, நீலகிரியில் அழிந்துவரும் சோலை மரக்கன்றுகளை நடவு செய்த அவர், மாணவ மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் மிக முக்கிய மலைத் தொடராக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரியில் இருந்து உற்பத்தி ஆகக்கூடிய நீர்தான் தமிழகத்தின் நீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்று தெரிவித்தார்.

நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதிக்குள் வீசி செல்வதால் வனவிலங்குகளும், கால்நடைகளும் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் காலநிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்வதும் அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் மண்சரிவு நிலச்சரிவால் நீலகிரி பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.