மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க தடாகம் போலீசார் மனு தாக்கல்

கோவை: தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையால் கோவை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தடாகம் காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.

கோவை: தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையால் கோவை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தடாகம் காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.

தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தடாகம் போலீசார் கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் விசாரணை செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து மாவோயிஸ்ட் தீபக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி தீபக்கை சந்தித்துப் பேச போலீசார் இதுவரை அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி சக்திவேல், மாவோயிஸ்ட் தீபக்கை வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளார். மாவோயிஸ்ட் தீபக்கை மருத்துவமனையில் சந்தித்த பின்பு, பிற்பகல் பதில் மனுதாக்கல் செய்யும் படியும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.



இதைத்தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....