கோவையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி; பீளமேடு போலீசார் விசாரணை

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் பயிலும் மாணவி அக்கல்லூரி வளாகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் பயிலும் மாணவி அக்கல்லூரி வளாகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சினேகா (19). இவர் இன்று காலை தனது கல்லூரி அருகே திடீரென உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கல்லூரி மாணவியை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால் தீயானது உடம்பில் வேகமாக பரவியதையடுத்து பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மாணவியை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தகவலறிந்து வந்த உறவினர்கள், மாணவியை அரசு மருத்துவமனையில் இருந்து பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவிக்கு உடல் முழுவதும் தீயானது 90% வரை பரவியுள்ளதால் மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மாணவியின் இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தற்போது வரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....