நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

குன்னூரில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கன்னி மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்னை வேளாங்கண்ணி நகர், கிருஷ்ணாபுரம், கன்னி மாரியம்மன் கோவில் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகளவு தேசம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆற்றின் ஓரம் கட்டப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் அகற்றும் பணி இன்று தொடங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள மூன்று தரைப் பாலங்களை உயர்த்தி கட்டப்படும் எனவும் கன்னி மாரியம்மன் கோவில் பகுதியில் வெள்ள நீர் வெளியேற்ற கல்வெட்டுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், நீலகிரிக்கு வருகை தரும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டு நிதிப்பெற்று அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.