திமுக சார்பில் கோவை மேயர் வேட்பாளராகிறார் மீனா ஜெயக்குமார்?

கோவை: உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ந்தேதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் மாவட்டத் தலைமையகங்கள் மேயர், கவுன்சிலர், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி போன்ற பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோரிடம் அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றன

கோவை: உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ந்தேதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் மாவட்டத் தலைமையகங்கள் மேயர், கவுன்சிலர், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி போன்ற பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோரிடம் அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றன

கோவை மாவட்ட தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில், கடந்த, 14ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. மாவட்ட பொறுப்பாளரான எம்.எல்.ஏ கார்த்திக் மனுக்கள் பெறுகிறார். மேயர், கவுன்சிலர் பதவிக்கு, இதுவரை 1,200 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

மேயர் பதவிக்கு 3 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 202 பேரும் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கட்டணத்துடன் சமர்ப்பித்தனர். வரும் 20ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் மனு கொடுப்போர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இருபது வருடங்களாக கோவை மேயர் பதவியில் 5 ஆண்கள் பதவி வகித்த வந்த நிலையில், அடுத்த கோவை மேயராக ஒரு பெண்ணாக இருப்பார் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், கோவை மேயர் வேட்பாளராக கோவை தி.மு.க. மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை செயலாளராக மீனா ஜெயக்குமார் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் அல்லது எந்தவொரு தேர்தல்களிலும் இதுவரை போட்டியிடாத மீனா ஜெயக்குமாரை கோவை மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க இருப்பதாக திமுக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கோவையின் முதல் மேயராக தமிழ் மாநில காங்கிரஸின் வி.கோபாலகிருஷ்ணன் பதவி வகித்தார். அடுத்ததாக அதிமுகவின் டி.மலரவன் இருந்தார். பின்னர் காங்கிரசின் ஆர்.வெங்கடாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அதிமுகவில் எஸ்.எம். வேலுசாமி 2014ல் பதவி விலகிய பின் பி.ராஜ்குமார் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...