கோவை: தொண்டாமுத்தூர் ஒன்றிய மாதம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் கடை எண் 2227 கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், அரசு நிர்ணயம் செய்த நேரத்தை விட இருபத்தி நான்கு மணி நேரமும் முறைகேடாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனை தடுக்க வலியுறுத்தி மாதம்பட்டி இளைஞர் குழுவினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

மனு அளித்த பின்னர் அவர்கள் கூறுகையில், நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தை தாண்டி அங்கு மது விற்பனை செய்யப்படுவதாலும் வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பின்புறம் மதுக்கடை உள்ளதால் குடித்து விட்டு வருபவர்கள் வங்கி முன்பு படுத்து விடுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் வங்கிக்கு செல்லும் பாதையை மறைத்தபடி இவர்கள் அங்கேயே படுத்து விடுவதால் வங்கிக்கு வருபவர்கள் பெரும் அவதிப்படுவதாகவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகத் தெரிவித்த அவர்கள், மதுக்கடை மறைவாக அமைந்துள்ளதால் மாணவர்கள் மது அருந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக குற்றம் சாட்டினர்.
எனவே உடனடியாக இந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதே போல், ஆனைமலை பகுதியில் புதிதாக அமைய உள்ள கடையின் அருகில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சமுதாய கூடம், பால்வாடி ஆகியவை உள்ளதால் மதுபான கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மகாத்மா காந்தி ஆசிரமத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.