குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி; சாலையில் வாழை மரங்கள் நட்டு போராட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள், சாலையில் வாழை மரங்களை நட்டு போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள், சாலையில் வாழை மரங்களை நட்டு போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளதால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டமுடியாமல் தடுமாறி, விபத்து ஏற்படுபது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதையாக பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சுப்பிரமணியர் கோவில் சாலை வழியே அனுப்பப்படுகிறது .

இந்நிலையில், தற்போது மழைக்காலம் என்பதால் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழிகள் தெரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலையில் வாழை மரங்களை நட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி முழுவதும் சாலைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டி நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக கூறி போராட்டத்தில் கோசங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....