கோவை: அரசியல் நிலையற்ற தன்மையை கூறும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளது குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 83வது நினைவு நாளை முன்னிட்டு கோவை சிறையில் உள்ள செக்கு மற்றும் அவரது உருவ படத்திற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், தமிழகத்தை பொறுத்தவரை சினிமா கலைஞர்கள்,அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பவர்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் யார் முதல்வராவது என்பது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தெரிவித்ததாக கூறினார்.
மேலும், அரசியலில் எந்த நேரத்தில் எந்த பொறுப்பு, யாருக்கு வருமென தெரியாது எனவும் கூறிய அவர், நீண்ட காலம் பணியாற்றி மக்களோடு தொடர்புடையவர்களுக்கு அரசியல் இடமுண்டு எனவும் அரசியல் நிலையற்ற தன்மையைக் கூறும் வகையில் முதலமைச்சர் குறித்து ரஜினி கூறியுள்ளார் எனவும் அது குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல என்று கூறிய அவர், அரசியலில் எந்த ஒரு அதிசயமும் நிகழும் என தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் எப்படி அமையுமென்பதை காலம் தான் சொல்ல வேண்டும் என தெரிவித்த அவர், தேர்தல் போட்டியிடுவது மற்றும் கட்சி பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசியலில் வெற்றிடம் தொடர்பான கேள்விக்கு கூட்டணிக் கட்சிகள் ஒரே மாதிரி பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் என தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பது பாஜக கருத்து எனவும் வெற்றிடம் இல்லை என்பது அதிமுக கருத்து எனவும் அவர் கூறினார்.