'குட்டி ரோடீஸ்' குழந்தைகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை: குட்டி ரோடீஸ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் (186) நேற்று கொடிசியாவில் நடத்தியது. குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் கலந்து கொண்டு, ‘ஒரு காரணத்துக்காக சைக்கிள் ஓட்டுதல்’ நிகழ்வில் பங்கேற்றனர்.

கோவை: குட்டி ரோடீஸ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் (186) நேற்று கொடிசியாவில் நடத்தியது. குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் கலந்து கொண்டு, ‘ஒரு காரணத்துக்காக சைக்கிள் ஓட்டுதல்’ நிகழ்வில் பங்கேற்றனர்.

சுமார் 700 குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் 500 மீட்டர், 1 கி.மீ., 5 கி.மீ., போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. யுனைடெட் ரவுண்ட் டேபிள் ஏரியா 7 துணைத்தலைவர் டிஆர் பிரதீப் ராஜப்பா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

விழாவில் அவர் பேசுகையில், சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் ஏன் என்பதை பற்றியும், குழந்தைகள் சாலை பாதுகாப்பு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் விளக்கம் அளித்தார். ஆடல் பாடலுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் குழுவாக சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை பெற்றனர்.

குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து பொழுதுபோக்காக சொல்லித்தர வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஹெல்மெட், டி சர்ட் மற்றும் ஒரு குடீஸ் பேக் வழங்கப்பட்டன.

குழந்தைகள் சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் உறுதி செய்தனர். சைக்கிள் ஓட்டும் முன்பு, குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கம் தரப்பட்டனர். பல்வேறு டிராபிக் விளக்குகள், ஜீப்ரா கிராசிங் மற்றும் டிராபிக் குறியீடுகள் பாதைகளில் இடம் பெற்றது. அனைத்து குழந்தைகளுக்கும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும், குறியீடுகளையும் புரிந்து கொள்ளும் வகையில் உணர்த்தப்பட்டன.

குழந்தைகள் ஒன்றாக இணைந்து சைக்களில் செல்வதை உடன் வந்திருந்த பெற்றோர்களும் பங்கேற்றனர். போட்டி நிறைவுக்குப்பின் அனைத்து குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கோயம்புத்துார் ரவுண்ட் டேபிள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கோவை பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தேவையான வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்துள்ளது. இதுவரை 31 வகுப்பறைகள் 3 கழிப்பறை பிளாக்குகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் 1500 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...