நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பகுதியில் காட்டுமாடு தாக்கியதில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பகுதியில் காட்டுமாடு தாக்கியதில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சின்னவெள்ளையன் ( என்கிற ) இராமையா (70). இவர் அங்குள்ள தனியார் விடுதியில் இரவு நேர காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று காலை காட்டுமாடு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். இதனையடுத்து, குன்னூர் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவரது உடல் குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.