கோவையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை நேரில் சந்தித்த சட்டீஸ்கர் மாநில போலீசார்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சட்டீஸ்கர் மாநில போலீசார் நேற்றிரவு நேரில் சந்தித்ததையடுத்து போலீஸ் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யவுள்ளதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சட்டீஸ்கர் மாநில போலீசார் நேற்றிரவு நேரில் சந்தித்ததையடுத்து போலீஸ் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யவுள்ளதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 9ஆம் தேதி சிறப்பு அதிரடிப்படை காவல் ஆய்வாளர் ஜான் தலைமையிலான போலீசார் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது சேம்புகரை - பெருமாள் முடி பகுதியில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் இரண்டு ஆண் ஒரு பெண் ஆகியோர் சிறப்பு அதிரடிப்படையினர் வருவதைக் கண்டு தப்பியோட முற்பட்டனர். அப்போது அதில் ஒரு ஆண் பள்ளத்தில் விழுந்தார். இதையடுத்து மற்ற இருவரும் தப்பி ஓடினர்.

இதைதொடர்ந்து சிறப்பு அதிரடிப்படையினர் பள்ளத்தில் விழுந்தவரை மீட்டு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதையடுத்து மாவோயிஸ்ட் தீபக்கிற்க்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படியிருக்க தீபக் மீது சட்டீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்றிரவு சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து டிஎஸ்பி மனோஜ் குமார், ஆய்வாளர் சஞ்சய் சிங், ஆசி மகேஸ்வரன் ஆகியோர் அடங்கிய போலீசார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை நேரில் சந்தித்தனர். 

இதைத்தொடர்ந்து போலீசார் தீபக்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

மேலும் தீபக்கை சட்டீஸ்கர் மாநில போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...