கோவை: கோவை பி-3 வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பான்மசாலா குட்கா பொருட்களை மாநகர போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

தமிழக அரசு பான் மசாலா குட்கா பொருட்கள் விற்பனையை தடை செய்துள்ளதையடுத்து சட்டவிரோதமாக விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகம் முழுவதுமே பான் மசாலா குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்படியிருக்க, கோவை மாவட்டத்தில் பான் மசாலா பொருட்கள் விற்பனையை தடை செய்யும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக போலீசார் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மாநகர போலீசார் கோவை மாநகரில் பான்மசாலா குட்கா விற்பனையை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் தனிப்படை அமைத்தும் அந்தந்த காவல் நிலையங்களின் உதவியுடனும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சரவணம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் பி-3 வெரைட்டி ஹால் காவல் எல்லையில் பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையாளர், பாலாஜி சரவணன் தலைமையிலான தனிப்படையினரும் வெரைட்டிஹால் ரோடு போலீசாரும் தாமஸ் வீதியிலுள்ள குடோனில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கூல் லிப்ஸ் 100 பாக்கெட்டுகள், பதான் 350 பாக்கெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் (20) என்பதும் இவர் அந்த குடோனின் உரிமையாளர் என்பதும் அதேபோல இவர் பெங்களூருவிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் மற்றொருவர் தாமஸ் வீதியை சேர்ந்த யுவ்ராஜ் (20) என்பதும் இவர் தினேஷிடம் பணிபுரிந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்த விலையான ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பான்மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கோவை மாநகரில் பான்மசாலா குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாநகர போலீசார் தெரிவித்தனர்.