அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான பெண்ணிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்; ரூ.5 லட்சம் நிதியுதவி

கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், அப்பெண்ணிற்கு செயற்கை கால் பொருத்துவதற்கான பொறுப்பை திமுக ஏற்குமென தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், அப்பெண்ணிற்கு செயற்கை கால் பொருத்துவதற்கான பொறுப்பை திமுக ஏற்குமென தெரிவித்துள்ளார்.

கடந்த 11ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.



இந்நிலையில், நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியின் பெற்றோரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் திமுக சார்பில் ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை அளித்து நிதியுதவி வழங்கினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கோவையில் கடந்த 11ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன எனவும், கொடிகம்பம் சாய்ந்து லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், ராஜேஸ்வரியின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், இச்சம்பவம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவமாக உள்ளது எனவும் அவர் கூறினார். 

இந்த விபத்து தொடர்பாக லாரி ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்திருந்தாலும், இதற்கு காரணமான அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும், இச்சம்பத்தை மறைக்க அரசு அதிக முயற்சி எடுத்ததாக குற்றம்சாட்டினார். 

மேலும், இந்த விபத்து தொடர்பாக அலட்சியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்திருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளதாக கூறிய அவர், ராஜேஸ்வரியை காப்பாற்ற அரசு முழு பொறுப்பையும், மருத்துவ செலவையும் அரசு ஏற்று கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.



அதேபோல, ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்ட நிலையில், செயற்கை கால் பொருத்துவதற்கு திமுக பொறுப்பேற்று, செய்து தரும் எனவும், ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு திமுக எல்லாவித உதவியும் செய்து கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு திமுக துணை நிற்கும் என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...