நீலகிரியில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு; போக்குவரத்து முடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்தன.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்தன.



அதேபோல, குன்னூர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பரசு ராம் தெருவில் உள்ள ஆற்றில் அதிக வெள்ளம் பெருக்கு காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் என 19 வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.



மேலும், பல்வேறு இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுத்ததால் விடிய விடிய மக்கள் அவதியடைந்தனர். குன்னூர் நான்சச் செல்லும் சாலையில் தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மரங்கள், பாறைகள் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இதையடுத்து, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் DE குழந்தைவேலு மற்றும் AE சாதிக்பாட்சா தலைமையில் 5 ஜேசிபி இயந்திரம், 1 இட்டாச்சி, 1 கம்ரசர் மற்றும் 5 டிப்பர் லாரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், குன்னூர் நான்சச் நெடுஞ்சாலையில் 5 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்களை அகற்ற 2 ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், தீயணைப்பு நிலைய சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் அந்தரத்தில் தாெங்கி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் அனைத்து துறைகளின் மூலமாக வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...