நீலகிரி: மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கோத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கல்லாறு, மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதத்தில் மட்டும் 5 முறை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் பேருந்துகள் கோத்தகிரி வழியாக வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.