திருப்பூர்: திருப்பூர் டாலர் பவுண்டேசன் சார்பில், திருப்பூரை தூய்மைப்படுத்தும் வகையிலும், புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கான நிதியை அதிகப்படுத்தவும் ‘நம்ம திருப்பூர்’ என்ற பெயரில் ப்ளாக் ரன் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பெரியவர் மற்றும் சிறியவர்களுக்குச் செல்லும் வழியிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கும் வகையில் அதற்கு தேவையான பை, கிளவுஸ், முகமூடி ஆகியவை வழங்கப்பட்டது. முப்பது கி.மீ உள்ளடக்கிய ஏழு வகையான வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் பெரியவர்களுக்கு ஐந்து கிமீ தூரமும், சிறியவர்களுக்கு மூன்று கிமீ தூரமும் ஓட்ட தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. ஓட்டத்தின் இறுதியில் குப்பை பையை ஒப்படைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக இந்த நிகழ்வினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.