சென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: சென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

கோவை: சென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.



சென்னையில் கடந்த 9 ஆம் தேதி விடுதி அறையில் பாத்திமா லத்தீப் என்ற ஐ ஐ டி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். 



மேலும், பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசியர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் மாணவி பாத்திமா லத்தீப்பின் இறப்புக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நிறுவன படுகொலையை கண்டித்தும் ஜாதி, மத ரீதியான பிரச்சனைகளை கண்டித்தும் கோசங்களை எழுப்பி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....