கோவை: கோவை அடுத்த வேடப்பட்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 718 பயனாளிகளுக்கு ரூ.5.22 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை மாவட்டம், பேரூர், வேடப்பட்டி, தாளியூர் ஆகிய இடங்களில் இன்று (16.11.2019) முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாம்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 718 பயனாளிகளுக்கு ரூ.5.22கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாம்களில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.