கோவை: கோவை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளின் விழிப்புணர்வுக்கான எழில்மிகு கோவை கண்காட்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பீளமேடு அவினாசி சாலை, சுகுணா கல்யாண மண்டபத்தில் தூய்மை மற்றும் பசுமைக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்த கண்காட்சியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார ஜடாவத் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
இக்கண்காட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள், 24X7 குடிநீர் திட்டப்பணிகள், மனிதக்கழிவு அகற்றும் ரோபோ செயல்பாடுகள், மருத்துவக் கழிவு, உணவுக்கழிவு அகற்றும் முறைகள், கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் மாற்று போன்ற 81 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு மாநகரை தூய்மையாக வைத்துக்கொள்ளும் வகையில் பணியாற்றி வருகிறது. கோவை மாநகராட்சியில் நாள்தோறும் சுமார் 850 டன்னிலிருந்து 1100 டன் வரை திடக்கழிவுகளைத் தரம் பிரித்து, வீடுகளிலிருந்தும் வியாபார நிறுவனங்களிலிருந்தும் சேகரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரித்து மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வகையில் அப்புறப்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் 2014ல் செயல்படுத்தப்பட்டது. தரவரிசையில் ஒவ்வொரு வருடமும் நல்ல மதிப்பீடுகளை பெற்று நமது கோவை மாநகராட்சி முன்னேறிவருகிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 100 கிலோ உற்பத்தி செய்பவர்கள் மொத்த கழிவு உற்பத்தியாளர்கள். இக்கழிவுகளை முறையாக தரம் பிரித்து மக்கும் குப்பைகளை அவரவர் இருப்பிடத்திலேயே முறையாக கையாள வேண்டும். உரம் தயாரிப்பது, எரிவாயு உற்பத்தி போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றார்.
மொத்த குப்பை மொத்த கழிவு உற்பத்தியாளர்களுக்காக எழில்மிகு கோவை கண்காட்சி 2019 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் இயந்திர உற்பத்தியாளர்கள் தொழில் நுட்ப நிறுவனங்கள் சுமார் 81 நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன. கோவை மாநகராட்சியுடன் தொண்டு நிறுவனங்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் தூய்மை தூதுவர்களும் இணைந்து சிறப்பாக இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
மாநகரத்தில் உள்ள அனைத்து மொத்த கழிவு உற்பத்தியாளர்களும் பங்குபெற்றுப் பயன்பெறும் வகையில் மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் திடக்கழிவு சேவை அமைப்புகள் உற்பத்தியாளர்கள், புதிய தொழில் நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கண்காட்சியில் குப்பைகளை உரமாக்கும் இயந்திரங்கள், கருவிகள், எரிவாயு உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பிளாஸ்டிக்கிற்கான மாற்றுப் பொருட்கள், மின்னணுக்கழிவுகள் கையாளும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறப்பாக அரங்குகள் அமைத்துள்ளனர்.
இக்கண்காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், பெரு மருத்துவமனைகள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், பல்பொருள் அங்காடிகள், இறைச்சிக்கடைகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இக்கண்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. கோவை மாநகராட்சியில் தினமும் 200 டன் முதல் 300 டன் கழிவுகளை மொத்த குப்பை மேலாண்மை செய்யப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி கூறினார்.

பின்னர் மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிப்பதற்கான கழிவுகள் அகற்றும் ரூ.60 லட்சம் மதிப்பிலான 10 TATA ACE வாகனங்களை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம், ம.செல்வன், ஏ.ஜே.செந்தில் அரசன், மேற்கு மண்டல செயற்பொறியாளர் திட்டம் ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார், தூய்மை பாரா இயக்க தூதுவர்கள் மருத்துவர்.சாந்திபிரியா, ராக் ரவீந்திரன், டிம்பிள்லாலா, அனைத்து மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.