டிரான்ஸ்பார்மர் மீது மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்டு யானைகள்

கோவை: கோவை பெரியநாய்க்கன்பாளையம் அருகே உணவுதேடி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட முயன்ற போது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது யானைகள் மோதியதில் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யானைகள் உயிர் தப்பின.


கோவை: கோவை பெரியநாய்க்கன்பாளையம் அருகே உணவுதேடி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட முயன்ற போது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது யானைகள் மோதியதில் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யானைகள் உயிர் தப்பின.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி, மாங்கரை, பாலமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை மணியளவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாய்க்கன்பாளையம் பகுதியில் 5 யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் உணவு தேடி வந்துள்ளன. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது, யானைகள் கூட்டம் எதிர்பாராத விதமாக அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. 



இதனால், மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யானைகள் அனைத்தும் உயிர் தப்பின.



உணவுகள் தேடி காட்டு யானைகள் அடிக்கடி கூட்டமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...