வால்பாறையில் வனத்துறை காவலர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது.

வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா பகுதியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பகுதியின் நுழை வாயிலில் மானாம்பள்ளி வனச்சரகத்தின் சோதனை சாவடி அமைந்துள்ளது.

இங்கு பணியாற்றும் வனத்துறை காவலர்களுக்காக 5 குடியிருப்புகள் கட்டப்பட்டு வசித்து வருகிறார்கள். இந்நிலையில், காவலர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த போது, 5 காட்டுயானைகள் குடியிருப்பை முற்றுகையிட்டன. பின்னர், வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பை தின்றதுடன் அங்கு இருந்த பாத்திரங்கள், கட்டில் மேஜைகளை உடைத்து நாசப்படுத்தியது.



பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பல மணிநேர போராட்டத்திற்குப்பின் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...