கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.76-ல் ரூ.81 லட்சம் மதிப்பிலான புதிய பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடல், மழைநீர் வடிகால் அமைப்புகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் ஆகிய வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 76-வது வார்டு டெக்ஸ்டூல் காலனி பகுதியில் அம்ரூட் திட்டம் (2017-20)-ன் கீழ் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடலினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இப்பூங்காவின் சிறப்பம்சங்களாக சுற்றுச்சுவர், அலங்கார நுழைவு வாயில், சிறுவர் விளையாட்டுத்திடல், 170 மீ நளம் கொண்ட நடைபாதை தளம், பூங்கா புல்வெளி மற்றும் அழகு செடிகள், யோகா பயிற்சி மையம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், 8 வடிவ நடைபயிற்சி தளம், மின் கம்பங்கள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள், அலங்கார குடில், இருக்கைகள், காவலர் அறை, ஆழ்குழாய் கிணறு மற்றும் நீர் தேக்கத்தொட்டி போன்றவை உள்ளது.

பின்னர், ராமச்சந்திரா நகர் மற்றும் டெக்ஸ்டூல் காலனி பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைப்புகள் பணிக்கு பூமி்பூஜையினை அமைச்சர் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தெலுங்குபாளையம் மகப்பேறு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தினையும் ஆகமொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
பின்னர், தெலுங்கு பாளையம் மதாலேண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெற்கு மண்டலம், 76-வது வார்டுக்குட்பட்ட 33 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின்கீழ் நிர்வாக அனுமதி உத்தரவும், 19 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயர் மாற்ற உத்தரவும், 10 பயனாளிகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கான பணி உத்தரவும் ஆகமொத்தம் 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்.

மேலும், கோவை மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 377 பயனாளிகளுக்கு ரூ.8.25 கோடி மதிப்பில் கடனுதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜன் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.